செய்திகள்

பால் புரைக்கேறி குழந்தை பலி!

மட்டக்களப்பு – வாசிகசாலை வீதி – கொம்மாதுரை – செங்கலடி எனும் பிரதேசத்தை சேர்ந்த உதயகுமார் விதுஷினி என்ற 38 நாளேயான பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவதுää நேற்றுமுன்தினம் காலை இக் குழந்தை தனது தாயிடம் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும்போது பால் புரைக்கேறியதால் மயக்கமடைந்த குழந்தையை அருகிலுள்ள செங்கலடி வைதியசாலைக்கு கொண்டுசென்ற போது குழந்தை மரணமடைந்துள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய ஏறாவூர் பொலிசாருடன் சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் மரண விசாரணையை மேற்கொண்டார்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் தாய்ப்பால் குடிக்கும்போது குழந்தைக்கு புரைக்கேறியதால் சுவாசம் தடைப்பட்டு இதயம் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளது என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.