செய்திகள்

பிணையில் விடுதலையான பஸில் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரின் உடல் நிலைமையினை கருத்திற் கொண்டு வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய அவர் இன்னும் சில தினங்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக அவரின் சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி கைது செய்யப்பட்ட இவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டதுடன் இவர் அந்த காலப்பகுதியில் தேசிய வைத்தியசாலையின் கட்டணம் செலுத்தும் வாட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்ததுடன் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.