செய்திகள்

பிரசாந்துக்கு ஜோடியான ஆஸ்திரேலிய அழகி

பிரசாந்த் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடித்து வரும் படம் ‘சாஹசம்’.

இப்படத்தை அறிமுக இயக்குனர் அறிமுக இயக்குனர் அருண்ராஜ் வர்மா இயக்க பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த அழகி அமன்டா நடித்து வருகிறார்.

சாஹசம் படம் பாடல், ஆடல், அழகு ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் தந்து எழுதப்பட்ட கதை என்பதால் இளமையான, அழகான நடனமாட தெரிந்த பெண்ணை கடந்த எட்டு மாதங்களாக இந்தியா முழுவதும் தேடிவந்து, அமண்டாவை கண்டு பிடித்து கதாநாயகி ஆக்கி உள்ளார் நடிகர் தியாகராஜன். நீளமான வசனங்களை கூட நொடியில் மனப்பாடம் செய்து கொண்டு வசனத்திற்கேற்ப உச்சரிப்புடன் நடிப்பில் வெளுத்து வாங்கிவிடுகிறாராம் அமண்டா.

நாசருடன் நடிக்கும் போது அமண்டாவின் நடிப்பு நாசரையே அசர வைத்ததாம். தமிழ் பட உலகிற்கு மற்றுமொரு கைப்படாத ரோஜா என நாசர் பாராட்டினாராம். அமண்டாவின் பழகும் விதம், காலம் தவறாமை, தொழில் சிரத்தை, கிரங்க வைக்கும் அழகு, மற்றும் கொஞ்சும் தமிழ் இவை எல்லாம் மொத்த பட குழுவினரையும் வியக்க வைத்ததாம்.

பிரஷாந்த் அமண்டா பற்றி கூறுகையில், ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி என்றும், சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு வெகுவாக பேசப்படும் கதாநாயகி ஆவார் என்றும் அமண்டாவை பற்றி விமர்சித்தார்.

மிகப்பெரிய நடிகரான பிரஷாந்துடன் இணைந்து அற்புதமாக உருவாகும் சாஹசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என மனம் உருகி போகிறாராம் அமண்டா.

ஹாலிவுட் நடிகையான நர்கிஸ் பக்ரி சாஹசம் படத்தில் ஒரே ஒரு நடனத்திற்கு மட்டும் ஒத்துக்கொண்டு பிரஷாந்துடன் நடனமாடி உள்ளார். இத்தகைய அட்டகாசமான படத்தில் நடிப்பது எனது அதிர்ஷ்டமே என நாணத்துடன் கூறுகிறார் பேரழகி அமண்டா.

பிரஷாந்த் அமண்டா நர்கிஸ் பக்ரியுடன் இணைந்து நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி, மாங்கா கதாநாயகி லீமா பாபு, மலேசியா அபிதா, நளினி, சின்னி ஜெயந்த், பெசன்ட் நகர் ரவி, சுவாமி நாதன், லண்டன் இந்து, பிரம்மாஜி, சாய்பிரஷாந்த், ஹேமா, ராவ்ரமேஷ், கோட்டா சீனிவாசராவ், ரியாஸ்கான், கிருஷ்ணவம்சி, மிப்பு, ஹலோ FM சுரேஷ், சாய்ராம் ராஜேந்திரநாத், என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

துரிதமாக தயாராகி வரும் சாஹசம் படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. சாஹசம் படத்தின் பாடல் காட்சிகள் மலேசியா, ஜப்பான், கொரியா நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. சாஹசம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெறும்.

பிரஷாந்தின் சாஹசம் படம் மே மாதம் வெளி வருமென எதிர்பார்க்கலாம். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சாஹசம் படம் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணம் இருக்குமாம்.