செய்திகள்

பிரச்சாரத்தை முடுக்கிவிடும் தமிழரசுக் கட்சி: சிறிதரன் தலைமையில் கிளிநொச்சியில் இன்று கூட்டம்

பொதுத் தேர்தல் பிரச்சாரத்துக்கான முன்னோடியாக தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் ஒன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தலைமையில் இன்று மாலை கிளிநொச்சியில் நடைபெறவிருக்கின்றது.

இதில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரன் ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தவுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள்.

பொதுத் தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் வியூகங்கள் உட்பட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவிருக்கின்றது.