செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : அஸ்கிரிய தேரர் அதிருப்தி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக எதிர்க் கட்சியினரால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக கண்டி அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கத் தேரர் வண. கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி  அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்கத் தேரர் வண. கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸியை சந்தித்த போதே, தேரர் பிரதருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் அதிருப்பதியை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் போதும் தவறுகள் திருத்தங்கள் இருந்தால் சுட்டிகாட்டுவது தவறான விடயம் இல்லை. ஆனால் அரசை வீழ்த்தும் சதித் திட்டத்துடன் தனி ஒரு நபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவது நியாயமற்ற விடயமாகும்.

எதிர்க்கட்சியினர் என்ற வகையில் குறைகளை சுட்டிகாட்டி வாதாடி அதன் மூலம் தீர்வுகளை பெற வேண்டும் என்றார்.