செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜனாதிபதி எதிர்க்கவில்லை : அனுர பிரியதர்ஷன யாப்பா

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜனாதிபதியிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லையென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நீக்கிக் கொள்வதாக நாம் கூறியதாக ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரான அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். அப்படி நாம் கூறியதில்லை எமக்கு அவ்வாறு நீக்கிக்கொள்ளும் நோக்கமும் கிடையாது.

இதேவேளை பிரேரணைக்கு ஜனாதிபதி தடையாக இல்லை. இது பாராளுமன்றத்துடன் தொடர்படைய விடயம் இதில் அவர் தலையிட மாட்டார் இதன்படி  அவர் இது தொடர்பாக  எமக்கு எவ்வித எதிர்ப்பும் வெளியிடவில்லை என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.