செய்திகள்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் விவாதத்திற்கு எடுக்கச் செய்வோம் ; நிமல் சிறிபால

ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில்  இரண்டாவது சபை அமர்வின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை  விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியுமென சபை முதல்வரான  லக்‌ஷ்மன் கிரியெல்ல  இணக்கம் தெரிவித்துள்ள போதும் அதற்கும் முன்னர் அதனை விவாதத்திற்கு எடுத்து நிறைவேற்ற முயற்சிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இவ்வேளையில் அதற்கு ஜூலை 3வது வாரத்தில் அனுமதியளிப்பதாக சபை முதல்வர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அதற்கு முன்னர் அந்த பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவே நாம் முயற்சிக்கின்றோம். இதன்படி அடுத்த வாரம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானமெடுக்கவுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.