செய்திகள்

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவில்லை: மகிந்த ராஜபக்‌ஷ

பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவது தொடர்பில் தான் இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கலா­நிதி ராஜ தர்­ம­பால எழு­திய மஹா­வீர வம்­சய என்ற நூலின் வெளி­யீட்டு விழா நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள அபே­ராம விகாரை மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது.

இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு நூலை வெளி­யிட்டு வைத்­து­விட்டு அங்­கி­ருந்து வெளி­யேறும் போது ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு கூடி­யி­ருந்த ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­களும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வழங்­கிய பதில்­களும்.

கேள்வி: உங்­க­ளுக்கு எதி­ராக தொடுக்கப்­பட்ட வழக்கு தொடர்பில்?

பதில்: நீதி­மன்­றத்தின் சுயா­தீனம் தொடர்­பாக எனக்கு நம்­பிக்கை இரு­க்கின்­றது. அத்­தோடு நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தி­யினால் எடுக்­கப்­படும் முடி­வு­களை நீதி­மன்­றத்தில் சவா­லுக்கு உட்­ப­டுத்த முடி­யாது. இது அர­சி­ய­ல­மைப்­பி­லேயே விதந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி: – ஏ.எஸ்.பி யின் பீகொக் மாளி­கையில் தங்கப் போவ­தாக செய்­திகள் வெளி­வந்­துள்­ளன உண்­மையா?

பதில்: ஆம் உண்­மைதான். பீகொக் மாளிகை அல்ல. பல்­வேறு மாளி­கை­களில் என்னை வந்து தங்­கு­மாறு அழைப்­புக்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றன.

கேள்வி-: உங்கள் தோல்­விக்கு பஷில் ராஜபக் ஷ தான் காரணம் என விமல் வீர­வன்ச தெரி­வித்­தமை தொடர்பில்?

பதில்: அது அவ­ரு­டைய தனிப்­பட்ட கருத்து. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தனிப்­பட்ட கருத்­துக்கள் இருக்கும். அது தொடர்பில் எத­னையும் கூற­மு­டி­யாது.

கேள்வி: பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா?

பதில்: அது தொடர்பில் எதுவிதமான இறுதித் தீர்மானத்தையும் எடுக்கவில்லை. நான் தற்போது ஓய்வாக இருக்கின்றேன் என்றார்.