செய்திகள்

பிரதம நீதியரசர் விவகாரம்: ரணிலின் விளக்கத்தையடுத்து பாராளுமன்றில் குழப்பம்

பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று கொடுத்த விளக்கத்தையடுத்து சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனால் 20 நிமிடங்களுக்கு பாராளுமன்றக் கூட்டத்தை இடைநிறுத்தும் நிலை ஏற்பட்டது.

பாராளுமன்மன்றம் சபாநாயர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் 1.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், பிரதம நீதியரசர் மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கறுவாத்தோட்டம் பொலிஸில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு ஆகிய இரண்டு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார்.

Ranil 2அவர் தனது பதிலுரையில், பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவியிலிருந்து விலக்குவதற்கு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை சட்டரீதியற்றது. இந்நிலையில், அவரை பதவியிலிருந்து நீக்கியதன் பின்னர் புதிதாக பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸ், ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிகொண்டிருந்த போது அலரிமாளிகையில் இருந்தார்.

இதனையடுத்து அவரை பதவியிலிருந்து விலக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியிருந்தது. ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. அவரை இராஜினாமா செய்யுமாறு நாமும் கோரியிருந்தோம். அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. அவருக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்ட அவற்றையெல்லாம் அவர் பயன்படுத்தவில்லை. அதனையடுத்தே எங்களுடைய சட்ட ஆலோசகர்களின் ஆலோசகளுக்கு அமைய செயற்பட்டோம் என்றார்.

இதனையடுத்து சபையில் சிறு சலசலப்பு ஏ ற்பட்டதுடன் கட்சித்தலைவர்கள் கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட நடிவடைதொடர்பில் ஆராயவேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கைவிடுத்தது. இதனையடுத்தே சபை நடவடிக்கைகள் சபாநாயகர் 20 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.