செய்திகள்

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார். 81 வயதான அவர் சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.இன்று இரவு கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

சிறுகதை, நாவல், உரைநடை, சினிமா என எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்தவர். இவரது பல நாவல்கள் திரைப்படமாகி உள்ளன. இவரே மூன்று திரைப்படங்கள் இயக்கியுள்ளார். சாகித்ய அகாடமி, பத்மவிபூஷன், ஞானபீடம் என பல உயரிய விருதுகளைப் பெற்றிருந்தார்.

விகடனில் முத்திரைக்கதைகள் மூலம் வாசகர் பரப்பில் மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கியவர். மானுடத்தின் மீது மாறாத நம்பிக்கை கொண்டு எளிய மக்களின் இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். எந்த அறிவியல் கண்டுபிடிப்பாலும் மானுடத்தை அழிக்கமுடியாது என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். தன் எழுத்தின் மூலம் தமிழ் இலக்கியத்திற்கே தனி கம்பீரத்தை அளித்தவர்.