செய்திகள்

பழம் பெரும் திரையுலக மேதை ஏ.வின்சென்ட் காலமானார் (படங்கள் இணைப்பு )

பழம்பெரும் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான  ஏ.வின்சென்ட் தனது 86வது வயதில் இன்று காலமானார். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலிலதா, என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமையை உடையவர்.

‘அமரதீபம்’, ‘யார் பையன்’, ‘உத்தமபுத்திரன்’, ‘கல்யாண பரிசு’, ‘விடிவெள்ளி’, ‘மீண்டும் சொர்க்கம்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘தேன் நிலவு’, ‘புனர்ஜென்மம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘சுமைதாங்கி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘அடிமைப்பெண்’, ‘துணைவன்’, ‘துலாபாரம்’, ‘கெளரவம்’, ‘இரு வீடுகள்’, ‘இரு துருவம்’, ‘சவாலே சமாளி’, ‘வசந்தமாளிகை’, ‘திருமாங்கல்யம்’, ‘அக்கரைப்பச்சை’, ‘நான் பிறந்த மண்’, ‘இளமைக்கோலம்’, ‘ஆனந்தக்கும்மி’, ‘ஞானப்பறவை’போன்ற தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்களுக் ஒளிப்பதிவு செய்தவராவார். இயக்குநர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான இவர் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய கறுப்பு வெள்ளை படங்களில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவராவார்.இன்றைக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கு பாடமாக இருக்கும் பல காட்சிகளை இவர்தான் தனது படத்தில் அறிமுகப்படுத்தினார்.‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘துலாபாரம்’, ‘இரு வீடுகள்’, ‘திருமாங்கல்யம்’, ‘நாம் பிறந்த மண்’ ஆகிய படங்களை இயக்கி மிகச் சிறந்த இயக்குநர்கள் பட்டியலிலும் இடம் பிடித்தார்.‘வசந்த மாளிகை’யின் ஹிந்தி ரீமேக்கான ‘பிரேம்நகர்’ படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ‘பிலிம்பேர்’ விருதினை 1974-ம் வருடம் பெற்றிருக்கிறார்.இவருடைய மகனான ஜெயனன் வின்சென்ட் மலையாளத்தில்  புகழ் பெற்ற ஒளிப்பதிவாளராவார்.  இவருடைய இன்னொரு மகன் அஜயன் வின்சென்ட் இயக்குநராகவுள்ளார்.

IMG-20150225-WA0006 IMG-20150225-WA0007