செய்திகள்

பிரான்சில் ஆயுததாரிகள் பணயக்கைதிகளை பிடிப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சார்லி ஹெப்டோ சஞ்சிகை மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் பணயக் கைதிகளை பிடித்து வைத்துள்ளன நிலையில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஒரு ஆயுததாரி கொஷேர் என்ற அங்காடியினுள் புகுந்து பணயக் கைதி ஒருவரை பிடித்து வைத்துள்ளதாகவும், அதேசமயம், நேற்றைய தினம் மற்றொரு சந்தேக ஆயுததாரி பிரான்சின் கிழக்கு பிராந்தியத்தின் ஒரு இடத்தில் 5 பேரை பணயக் கைதிகளாக வைத்திருந்ததுடன் ஒரு பெண் பொலிசாரையும் சுட்டு கொன்றிருந்தார்.