செய்திகள்

பிரிட்டனின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உட்பட 8 நாடுகள் நீக்கம்!

இலங்கை உடப்பட 8 நாடுகளை பிரிட்டன், கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

செப்டம்பர் 22 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் இந்த பட்டியல் நீக்கம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, எகிப்து, கென்யா, ஓமான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 22க்கு பின்னர் இந்த நாடுகளில் இருந்து பிரிட்டன் வருவோர், ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முழுமையான தடுப்பூசி செலுத்தி இருந்தால் பீசீஆர் அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

-(3)