செய்திகள்

பிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்துக்கு இலங்கை அதி­ருப்­தி

வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்ட வெளி­வி­வ­கா­ரத்­துறை அமைச்சின் செய­லாளர் ரவிநாத் ஆரி­ய­சிங்க இலங்­கையில் இரு தேசம் ஒரு நாடு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற பிரித்­தா­னிய கொன்­சர்­வேட்டிவ் கட்­சியின் கருத்து தொடர்பில் இலங்கை அர­சாங்கம் அதன் கடு­மை­யான அதி­ருப்­தியை வெளிப்படுத்தி­யுள்­ள­தாக தெரிவித்துள்ளார்.கொன்­ச­வேடிவ் கட்­சியின் கருத்து தொடர்பில் இலங்கை அர­சாங்கம் கடு­மை­யான தமது அதி­ருப்­தியை வெளி­யி­டு­வ­துடன் இலங்­கையின் அர­சியல் அமைப்பின் பிர­காரம் இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத கொள்­கை­யாகும் என்­பதை நாம் அறி­வித்­துள்ளோம். எனினும் அவர்­களின் அர­சியல் நகர்­வு­களை நாம் கையில் எடுத்து பிர­சாரம் கொடுக்­கக்­கூ­டாது என்ற கார­ணத்­தினால் இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான நகர்­வு­களில் இதனை முடித்­துக்­கொண்டோம் என தெரிவித்தார்.

எனினும் அண்­மையில் இலங்­கையின் அர­சியல் களத்தில் சிலர் இந்த கார­ணி­களை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்ள கார­ணத்­தினால் வெளி­வி­வ­கார அமைச்சு பதில் தெரி­விக்­க­வேண்­டி­யுள்­ளது. அதற்­கான இந்த கார­ணி­களை நாம் மீண்டும் ஊட­கங்கள் முன்­னி­லையில் தெரி­விக்­கின்றோம். இலங்கை இராச்­சி­யத்தில் ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்­கையை ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. அதற்­கான சாதி­யமும் இல்லை என்­பதை உறு­தி­யாக தெரி­வித்­துள்ளோம் என்றார்.

கொன்­ச­வேடிவ் கட்­சியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் 55ஆவது பக்­கத்தில், சைப்ரஸ், இலங்கை மற்றும் மத்­திய கிழக்கில் இரு அர­சுகள் தீர்வு எனும் பதம் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை வெளி­வி­வ­கார அமைச்சின் ஆலோ­ச­னைக்கு அமைய பிரித்­தா­னி­யாவில் உள்ள இலங்கை தூத­ரகம் இது­கு­றித்து கடு­மை­யாக எதிர்ப்பு முறை­யீட்டை கொன்­ச­வேடிவ் கட்­சியின் இணைத் தலை­வ­ரான ஜேம்ஸ் கிள­வ­ரிடம் முன்­வைத்­துள்­ளது.

இந்த முறைப்­பாட்டு கடிதம் மூலம் இலங்­கைக்­கான உயர் ஸ்தானிகர் மனிஷா குண­சே­க­ர­வினால் நம்­வம்பர் மாதம் 27 திகதி அன்று தெரி­விக்­கப்­பட்­டது. இரு அர­சுகள் தீர்வை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை எனவும் ஐக்­கிய ராஜி­யத்தில் உள்ள எந்த ஒரு கட்­சியும் இவ்­வா­றான நிலைப்­பாட்டில் இருந்­த­தில்லை எனவும் அனைத்து கட்­சி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்ட பிரித்­தா­னிய அர­சாங்கம் , ஐக்­கிய இலங்­கையில் சமா­தா­னத்­தையும் நல்­லி­ணக்­கத்­தையும் உரு­வாக்க ஆத­ரவு தெரி­வித்­தன எனவும் இலங்கை உயர் ஸ்தானிகர் அக்­க­டி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.மேலும் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தலை கொண்ட அவர்­களின் காய்­ந­கர்த்­தல்­களின் இலங்கை தலை­யிட தயா­ரில்லை எனவும் வெளி­வி­வ­கார செய­லாளர் தெரிவித்துள்ளார்.(15)