செய்திகள்

பிரித்தானியாவில் அறுதிப்பெரும்பான்மையுடன் கன்சர்வேட்டிவ் ஆட்சி அமைக்கிறது (இறுதி முடிவுகள் )

பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தனி ஒரு கட்சியாக 331 (36.9%) ஆசனங்களை கைப்பற்றி பாராளுமன்ற அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.

232 (30.4%)ஆசனங்களை மட்டுமே பெற்றுதொழில் கட்சி படு தோல்வி அடைந்துள்ள நிலையில், அதன் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக எட் மிலபான்ட் சற்று முன்னர் அறிவித்திருக்கிறார். தேர்தலில் தொழில் கட்சி தோல்வி அடைந்தமைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

கட்சிகள் பெற்ற ஆசனங்கள் விபரம்:

கன்சர்வேட்டிவ்                                     331
தொழில் கட்சி                                       232
எஸ் என் பி                                               56
லிபரல் டெமோகிரட்ஸ்                           08
பிரித்தானிய சுதந்திர கட்சி                    01

2875D7D200000578-3072601-image-a-48_1431091341842