செய்திகள்

பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி ஆரம்பம்

பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த மாதம் 26 ஆம் திகதி பபிரித்தானியாவின் பல விளையாட்டு மைதானங்களிலும் சிறப்பாக ஆரம்பமாகி இருக்கிறது.

வாரத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நடைபெறும் இந்த கிரிக்கட் சுற்றுபோட்டியில் 44 அணிகள் மோதுகின்றன. இந்த அணிகளைச் சேர்ந்த சுமார் 1000 ற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் விளையாடுகின்றனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த போட்டிகள் 5 பிரிவுகளாக (Premier, Super, Champions, Legends, Community) பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் 22 லீக் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளுக்கு மிகவும் அனுபவம் மிக்க நடுவர்கள் கடமையாற்றுவார்கள்.

பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அட்டவனையை கீழே காணலாம்.

[gview file=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/05/League-Tables-07-05-2015.pdf”]