செய்திகள்

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் மாபெரும் வர்த்தக கண்காட்சி

பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் April 2015 இல் மாபெரும் வர்த்தக கண்காட்சி ஒன்றினை  லண்டன் நகரில் ஒழுங்கு செய்துள்ளது. சம்மேளனத்தின் தலைவர் திரு திருவாசகம் இது பற்றி குறிப்பிடுகையில் ‘ எமது சம்மேளனமானது 2010 ல் இருந்து பல தமிழ் வர்த்தகர்களையும் வர்த்தக அமைப்புக்களையும் நெறிப்படுத்தி வந்துள்ளது. மேலும், இந்த கண்காட்சியின் உடாக வெவ்வேறு வகையான  வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் பொருட்களையும் சேவைகளையும் சந்தைப் படுத்துவதற்கான ஒரு தளத்தினை உருவாக்குவதே எமது நோக்கமாகும். இந்த வர்த்தக கண்காட்சியிலும் எமது நிறுவனத்தின் எல்லா முயற்சிகளிலும் பங்கெடுக்குமாறு எல்லா தமிழ் வர்த்தகர்களிடமும் நான் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன்’. என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வின் திகதியானது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.