செய்திகள்

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை திறந்துவைப்பு

பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு  சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் சிலை இன்று சனிக்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியினால் திறந்து வைக்கப்பட்டது.இந்த வைபவத்தில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கலந்து கொண்டார். காந்தியின் பேரப்பிள்ளையான கோபாலகிருஷ்ண காந்தியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

9 அடி நீளமான இந்த வெண்கல சிலை தென் ஆபிரிக்காவில் இருந்து காந்தி இந்தியாவுக்கு சென்று 100 ஆண்டுகள் பூர்த்தியை குறிக்கிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=6DUuMEfYGQQ” width=”500″ height=”300″]

2