செய்திகள்

பிரித்தானிய பிரதமரின் விஷேட செய்தியை மைத்திரியிடம் கையளித்தார் பிரித்தானிய அமைச்சர்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமருனின் விஷேட செய்தி ஒன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளிக்கப்பட்து, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியகோ ஸவயர் ஜனபதிபதியை இன்று சந்தித்து இந்தச் செய்தியை கையளித்தார்.

கொழும்பிலுள்ள ஜனபதிபதி செயலகத்தில் மைததிரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய பிரித்தானிய அமைச்சர், பின்னர் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்துப் பேசினார்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிப்பதற்காகவும், பிரதமர் டேவிட் கமருனின் விஷேட செய்தியை ஜனபதிபதி மைத்தரிடம் கையளிப்பதற்காகவுமே இலங்கைக்கான விஜயத்தை தான் மேற்கொண்டிருப்பதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்ளவுடன் பிரித்தானிய அமைச்சர் பேச்சுக்களை நடத்தினார். இரு தரப்பு உறவுகள் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்பினருனரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். போர்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் தொடர்பாகவும் இருவருமம் பேச்சுநடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.