செய்திகள்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபரோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையருக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் 13-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் லூசி சபரோவாவும், 7-ம் நிலை வீராங்கனையான செர்பியாவின் அனா இவானோவிச்சும் மோதினார்கள்.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சபரோவா 7-5, 7-5 என நேர்செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

french open5

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ்- பெஸின்ஸ்கி மோதுகிறார்கள். இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுடன் சபரோவா இறுதிப் போட்டியில் மோதுவார். செரீனா வில்லியம்ஸ் இறுதி போட்டிக்கு முன்னேறினால் சபரோவா முதல் பிரெஞ்ச் ஓபனை வெல்ல கடும் சவாலாக இருப்பார்.

இவானோவிச்சை வீழ்த்தி பிரெஞ்ச் ஓபனில் முதல்முறையாக இறுதிபோட்டிக்கு அடியெடுத்து வைத்தார். தற்போது தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சபரோவா, பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு வந்திருப்பதன் மூலம் தனது வாழ்க்கையில் முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைகிறார். 4-ம் சுற்றில் கடந்த வருட சாம்பியன் ஷரபோவாவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.