செய்திகள்

பிரேசிலில் வீட்டின் மீது நொறுங்கி வீழ்ந்த ஹெலிகொப்டர்! நால்வர் பலி

பிரேசில் நாட்டில் உள்ள வீடொன்றின் மீது ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் தலைநகர் சாவ் பாலோ அருகே வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று திடீரென்று அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானி மற்றும் பயணிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து ஹெலிகொப்டர் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், விமானி 30 ஆண்டு கால அனுபவம் வாய்ந்தவர் என்றும், ஹெலிகொப்டர் அனைத்துச் சோதனைகளையும் முழுமையாக முடித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.