செய்திகள்

பிழையாண தருணத்தில் சாட்டையை சுழற்றும் சர்வதேச கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபை

2012 இல் இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகம் குறித்து, ஆய்வொன்றினை மேற்கொள்ளும் பொறுப்பு தென்னாபிரிக்காவின் கரூன் லோகார்ட்டிற்கு வழங்கப்பட்டது.இரண்டு மாத ஆய்விற்கு பின்னர் அவர் ஓரு புதிய உதயம் என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் புதிய விடயங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை, மாறாக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எதிர்கொள்கின்ற நிதிநெருக்கடி மற்றும் தொழில்சார் தன்மையற்ற நிர்வாகம் ஆகியவை குறித்தே சுட்டிக்காட்டப்பட்டிருந்து.
அந்த அறிக்கையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருந்த விடயம் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நடவடிக்கைகளில் அமைச்சர்களின் தலையீடு என்றவிடயமே.இலங்கையின் விளையாட்டுச்சட்டங்கள் அமைச்சர்களின் தலையீடுகளை அனுமதிக்கின்றன, இது சர்வதேச கிரிக்கெட்கட்டுப்பாட்டுச்சபையின் விதிமுறைகளுக்கு எதிரானது என 2012 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கையில் பல வருடங்களாக விளையாட்டு அமைச்சர்pன் அனுமதிக்கு பின்னரே அணித்தெரிவு உறுதியாவது வெளிப்படையான விடயம்.
எனினும் கண்ணிற்கு தெரியாத பல வகை அரசியல் தலையீடுகள் இலங்கைகிரிக்கெட்டில் காணப்படுகின்றன.
2012 முதல் 2015 வரை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை முழுமையாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்தமை சாதராண இரசிகனிற்கும் தெரிந்த விடயம்.கடந்த ஜனவரியில் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சகல அமைப்புகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தது. அதன் விசுவாசிகளே அதனை ஆண்டனர்.

Nishantha-Ranatunga_328524k
எனினும் சர்வதேசகிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இதுவரை காலமும் பார்வையாளராக இருந்துவிட்டு தற்போதே நடவடிக்கைகளை எடுக்கதொடங்கியுள்ளது.
புதிய அரசாங்கம் இடைக்கால நிர்வாகசபையொன்றை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை காணப்பட்ட நிர்வாக குழுக்களில் இதுவே அரசியல்கலப்பற்றகுழு என உறுதியாக தெரிவிக்கலாம்,அதன் இலக்குகள் நன்கு தெளிவானவை,அதன் செயற்பாடுகளும் வெளிப்படையானவை.
இலங்கைகிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை சுத்தம்செய்வதற்கு இவ்வாறான இடைக்கால குழுவொன்றே பொருத்தமானது என்பதாலேயே விளையாட்டுதுறை அமைச்சர் அதனை நியமித்தார்.
இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் செல்வாக்கு தலைவிரித்தாடிய பல தருணங்களை சர்வதேச கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை சுட்டிக்காட்டலாம்.
அரசாங்க அமைச்சர்கள் தங்கள் விசுவாசிகளை நியமித்தனர்,அதன் காரணமாக வாக்களிக்கும் உரிமை பெற்ற விளையாட்டுக் கழகங்களிலும் ஊழல் , அரசியல் செல்வாக்கு தலைவிரித்தாடியது.
இதன் காரணமாகவே புதிய தேர்தல் ஓன்றை நடத்துவதால் மாற்றங்களை கொண்டுவரமுடியாது என விளையாட்டு அமைச்சர் தீர்மானித்தார்.
மேலும் கடந்த பல வருடங்களில் இலங்கை கிரிக்கெட் சந்தித்த இடைக்கால குழுக்களில்இதுவே சுதந்திரமானது, அரசியல் செல்வாக்கற்றது என தெரிவிக்கலாம்.
இதன் தலைவர் சிடாத் வெட்டிமுனி இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் ஓருவர்.

CRICKET-SRI-PRESS
இலங்கையில் வீழ்சியடைந்து வரும் உள்ளுர் கிரிக்கெட் கட்டமைப்பை சரிசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து அவர் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றார்.இலங்கை கிரிக்கெட்டின் சர்வதேச தரவீழ்ச்சிக்கு உள்ளுர் கிரிக்கெட் கட்டமைப்பின் தரம் குறைந்தது ஒரு காரணம்.
குமார் சங்ககாரவையும், மகேல ஜயவர்த்தனாவையும் சர்வதேச கிரிக்கெட் உலகம் தலையில்வைத்துகொண்;டாடியவேளை இலங்கை கிரிக்கெட் மாத்திரம் அவர்களை அரவணைக்க மறுத்தது.எனினும் புதிய நிர்வாகம் அவர்களை அரவணைத்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து மஹேல விளக்கவுரையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
சர்வதே கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இலங்கை கிரிக்கெட்டில் சாதகமான மாற்றங்கள் நிகழும் தருணத்தில் தனது சாட்டையை எடுத்துள்ளது என்றே தோன்றுகின்றது.
அன்ரூ பெர்ணாண்டோ- கிரிக்கின்போ