செய்திகள்

பிஸ்வாலின் வருகையால் ஓமந்தை சோதனை சாவடிக்கு தற்காலிக ஓய்வு

அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனைகள் தளர்த்தப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அமைக்கப்பட்ட இச் சோதனை சாவடி பல ஆண்டு காலமாக இயங்கி வந்த நிலையில் பொது மக்கள் மற்றும் அரச ஊழியர்கள் வெளிநாட்டு பிரஜைகள் பலவேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தனர்.

இந் நிலையில் இன்று காலை வழமைபோல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்ததுடன் வாகனகளுக்கான பதிவுகளும் இடம்பெற்றிருந்தது. எனினும் அமெரிக்காவின் ஆசிய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான பஉதவி இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால் இலங்கைக்கு வருகை தந்து சில மணித்தியாலங்களில் இச் சோதனைச்சாவடியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எனினும் பார ஊர்திகளில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்குட்படுத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.