செய்திகள்

பி.எம்.ஐ.சி.எச்.சின் நான்கு அறைகள் சோதனை: போலி வாக்குச் சீட்டுக்கள் காணப்படவில்லை

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் பெருந்தொகையான போலி வாக்குச் சீட்டுக்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளால் தெரிவக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து இன்று பகல் குறிப்பிட்ட அறைகள் திறக்கப்பட்டு சோதனையிடப்பட்டன.

ஐ.தே.க. தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய, உப தலைவர் ரவி கருணாநாயக்க, ஜாதிக ஹெல உறுமய எம்.பி. அத்துரலிய ரத்தின தேரர், ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் உட்பட எதிரணி முக்கியஸ்த்தர்கள் பலரும் பொலிஸ் அதிகாரிகளுடன் சென்று குறிப்பிட்ட அறைகளைச் சோதனையிட்டனர்.

சந்தேகப்பட்டது போல அங்கு போலி வாக்குச் சீட்டுக்கள் காணப்படவில்லை என எதிரணிப் பிரமுகர் ஒருவர் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.