செய்திகள்

பி.ஐ.எம்.சி.எச். 4 அறைகளுக்குள் வாக்குச் சீட்டுகள்: சோதனையிட எதிரணி கோரிக்கை

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டத்தில் பூட்டப்பட்டு கிடக்கின்ற நான்கு அறைகளுக்குள் பெருந்தொகையான வாக்குச் சீட்டுக்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள எதிரணியினர், அவற்றைத் திறந்து சோதனைகளை நடத்துமாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டப்பட்டிருக்கின்ற நான்கு அறைகளில் பெருந்தொகையான வாக்குச்சீட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் எதிரணியினர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

மண்டப வளாகத்துக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, கரு ஜயசூரிய,ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அத்துரலிய ரத்னதேரர் அங்கிருக்கும் பொலிஸாரிடமே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளனர். இருந்த போதிலும், அவற்றைத் திறந்து சோதனையிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.