செய்திகள்

பீகார், ஜம்மு காஷ்மீர் விவகாரம்: ஆர். எஸ். எஸ். ஸுடன் அமித் ஷா ஆலோசனை

பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்கள் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பி.டி.பி. கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்ட முதல்வர் மஞ்சி இன்று  நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

மஞ்சிக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிக்கக் கூடும் என்று கூறப்படும் நிலையில் அமித் ஷா டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். ஆர்.எஸ்.எஸ். இரண்டாம் நிலை தலைவர் சுரேஷ் பையாஜி மற்றும் பொதுச் செயலாளர்கள் தத்தாத்ரேயா, சுரேஷ் சோனி, பாஜகவுக்கான ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் கிருஷ்ண கோபால் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது டெல்லி தேர்தல் தோல்வி, பீகார் நிலவரம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.