செய்திகள்

பீட்டர்சனை மீண்டும் அணியில் சேர்க்கமாட்டோம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் கெவின் பீட்டர்சன் மீண்டும் சேர்க்கப்படமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அணித்தலைவர் ஆண்ட்ரூவ் ஸட்Nராஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அணியின் சகவீரர்கள் மற்றும் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து பீட்டர்சன் நீக்கப்பட்டார். அதன்பிறகு மீண்டும் அணிக்கு திரும்புவதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். ஆனால் இங்கிலாந்து நிர்வாகம் இவரை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் இந்திய ஐ.பி.எல். போட்டியை நிராகரித்து விட்டு இங்கிலாந்து கவுண்டியில் போட்டியில் விளையாடி வருகிறார். சரே அணிக்காக விளையாடும் அவர் நேற்றைய போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார். இதனால் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவரது கனவு பலிக்க.

இதுபற்றி அணியின் புதிய இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ட்ராஸ் தெரிவிக்கையில் பீட்டர்சன் திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கும் இடையிலான நம்பிக்கை குறைந்துவிட்டது. எனக்கும் அவருக்குமிடையிலான நம்பிக்கை தொடர்பான இந்த பிரச்சினை இது. இது ஒரு விவகாரம் இல்லை என்றாலும் 34 வயதான அவரால் குறைந்த நாட்களே அணியில் விளையாட முடியும் என்ற நிலையில் அவரை அணியில் சேர்ப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். அவருக்காக நான் எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாது. ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.