செய்திகள்

புகையிரதத்தில் மோதிய யானை படுகாயம்

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரதத்தில் மோதியதில் யானையொன்று படுகாயமடைந்துள்ளது.

பொலன்னறுவை வெலிகந்த புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட குறித்த விபத்தின்போது, புகையிரதத்தில் மோதிய யானை தூக்கியெறியப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய சோமாவதி வனப்பகுதியில் வசிக்கும் குறித்த யானையின் பின் கால்கள் இரண்டும் செயலிழந்துள்ளதாகவும், தற்பொழுது அந்த யானை தனக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் வேதனை காரணமாக அங்குள்ள நீர் நிலைகளில் இறங்கியும், எதுவும் செய்ய முடியாத நிலையிலும் தவித்து வருவதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

காயமடைந்துள்ள யானைக்கு சிகிச்சை வழங்குவதற்காக, இன்று கிரித்தலையிலுள்ள மிருக வைத்தியசாலையொன்றுக்கு வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.