செய்திகள்

புங்குடுதீவு கொலை: சந்தேகநபர்கள் நான்காம் மாடியில்

புங்குடுதீவு மாணவி வித்­தியா படு­கொலை சந்­தேக நபர்கள் ஒன்­ப­து­பே­ரை­யும் 30 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசா­ரிக்க ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நேற்று அனு­மதி வழங்­கிய நிலையில் அவர்கள் ஒன்­பது பேரும் நேற்று மாலை 4.00 மணி­ய­ளவில் கொழும்­புக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­னர்.

கொழும்பு கோட்­டையில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­திற்கு (நான்காம் மாடி) டபிள்யூ.பீ. என்.ஏ.9960 என்ற பஸ் வண்­டி­யூ­டாக இவர்கள் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர். குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை மற்றும் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் பொலி­ஸாரின் பலத்த பாது­காப்­புக்கு மத்­தி­யி­லேயே இவர்கள் இவ்­வாறு கொழும்­புக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டனர்.

பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (வயது 40), பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் (வயது 34), பூபா­ல­சிங்கம் தவ­குமார் (வயது 32) ,மகா­லிங்கம் சஷேந்­திரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாஷன், சிவ­தேவன் குஷாந்தன், பழனி ரூப­சிங்கம் குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன் மற்றும் சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசி­குமார் ஆகிய ஒன்­பது சந்­தேக நபர்­க­ளுமே ன்பது சந்தேக நபர்களுமே நேற்று இர­வோ­டி­ர­வா­க மன்றிலிருந்து நேராக நான்காம் மாடிக்கு மாற்றப்பட்டனர்.