செய்திகள்

புங்குடுதீவு பெண் பயணித்த கொழும்பு -பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் பேருந்தின் நடத்துனருக்கு கொரோனா தொற்று

புங்குடுதீவில் கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்ட பெண் பயணித்த பேருந்தின் நடத்துனர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.பருத்தித்துறை டிப்போவுக்கு சொந்தமான பேருந்தின் நடத்துநருக்கே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இரண்டுமுறை மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் அடிப்படையிலேயே அவருடைய தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 4ஆம் திகதி குறித்த பெண் கொழும்பில் இருந்து குறிப்பிட்ட பஸ் மூலம் யாழ்ப்பாணம் பயணித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியைச் சேர்ந்த நடத்துநர் உட்பட பேருந்தில் பயணித்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு முறை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.மினுவாங்கொடையிலிருந்து தனது ஊரான புங்குடுதீவிற்கு சென்றவேளை கொரோனா நோயாளி என அடையாளம் காணப்பட்ட பெண் பயணித்த பேருந்தின் நடத்துனரே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பரிசோதனையின் போது இது உறுதியாகியுள்ளது.

குறித்த நபருக்கு ஏற்கனவே PCR பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு தொற்று இல்லை என்ற முடிவு வெளியாகியது எனினும் சுகாதாரப் பிரிவினர் 14 நாட்களின் பின்னர் மீண்டும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தியிருந்தனர்.இந்தநிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இவர் மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.(15)