செய்திகள்

புதிதாக பதிவான 101 மரணங்களின் விபரங்கள்

கொரோனா தொற்றால் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மரணங்கள் பெப்ரவரி 6 ஆம் திகதி தொடக்கம் ஜுன் 9 ஆம் திகதி வரையில் 19 நாட்களில் இடம்பெற்றுள்ள மரணங்களின் எண்ணிக்கை என்று தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று (ஜூன் 10) இறுதியாக பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்றாளர்களின் மொத்த மரணங்களின் எண்ணிக்கை – 2011 ஆகும்.

அதன் விபரங்கள் வருமாறு,

பெப்ரவரி 06 – 01 மரணம்
ஏப்ரல் 01 – 01 மரணம்
மே 15 – 01 மரணம்
மே 16 – 01 மரணம்
மே 20 – 01 மரணம்
மே 21 – 01 மரணம்
மே 22 – 01 மரணம்
மே 26 – 01 மரணம்
மே 27 – 03 மரணங்கள்
மே 29 – 02 மரணங்கள்
ஜூன் 01 – 02 மரணங்கள்
ஜூன் 02 – 02 மரணங்கள்
ஜூன் 03 – 07 மரணங்கள்
ஜூன் 04 – 04 மரணங்கள்
ஜூன் 05 – 04 மரணங்கள்
ஜூன் 06 – 27 மரணங்கள்
ஜூன் 07 – 27 மரணங்கள்
ஜூன் 08 – 13 மரணங்கள்
ஜூன் 09 – 02 மரணங்கள்

உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம் ∙ பால்

பெண்கள் – 48
ஆண்கள் – 53

∙ வதிவிடப் பிரதேசம்

வாழைச்சேனை, வேபோட, பசறை, வெலம்பட, புப்புரஸ்ஸ, நாவலப்பிட்டி, தொலஸ்பாகை, நுவரெலியா, ஹற்றன், றாகம, பொலன்னறுவை, பண்டாரகம, நேபொட, மில்லனிய, உனவட்டுன, அமுகொட, ஹிரிம்புர, வக்வெல்ல, திக்வெல்ல, காலி, தியதலாவை, வத்தளை, ஜாஎல, மினுவாங்கொடை, சந்தலங்காவ, தெவுந்தர, கம்பஹா, கல்கிசை, ஹோமாகம, பிலிந்தலை, தெஹிவளை, மஹரகம, கொழும்பு 15, கெஸ்பேவ, கந்தபொலை-நுவரெலியா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகலை, நாத்தாண்டிய, அக்கறைப்பற்று, மொரட்டுவை, மடவல, ஹப்பகஸ்தென்ன, நாகொட-களுத்துறை, மத்துகம, பேருவளை, கித்தலவ-களுத்துறை, மக்கொன, உக்குவெல, மாத்தளை, கட்டுகித்துல, கரந்தெனிய, கட்டுகஸ்தோட்டை, அங்கொட்டாவல, ஆண்டியம்பலம், மட்டக்களப்பு, உடபுஸ்ஸல்லாவ, ரத்தொலுகம, சீதுவ, அரநாயக்க, புலத்சிங்கள, அங்குருவாத்தோட்ட, கோவின்ன, ஹொரணை, வலல்லாவிட்ட, பொம்புவல, கண்டி, வெரல்லேகம, வேயங்கொடை, வெலிகம, பூஸ்ஸ, ரத்கம, மாரவில, படல்கம, அம்பகஸ்துவ, எகொட உயன, அங்குலான, தும்மலசூரிய, மற்றும் திகன்னேவ.

வயதெல்லை

வயது 20 இற்கு கீழ் – 00
வயது 20 – 29 – 01
வயது 30 – 39 – 03
வயது 40 – 49 – 02
வயது 50 – 59 – 14
வயது 60 – 69 – 30
வயது 70 – 79 – 25
வயது 80 – 89 – 21
வயது 90 – 99 – 05
வயது 99 இற்கு மேல் – 00

உயிரிழந்த இடங்கள்

வீட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 30
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்தவர்கள் – 14
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் – 57

உயிரிழந்தமைக்கான காரணங்கள்

கொவிட் தொற்றுடன் கொவிட் நிமோனியா, சுவாசத்தொகுதி செயலிழப்பு, நீரிழிவு, உயர் குருதியழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய், மோசமான சுவாசக்கோளாறு, இதய நோய் நிலைமை, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நாட்பட்ட கல்லீரல் நோய், குருதி நஞ்சானமையினால் அதிர்ச்சி, மூச்சுக்குழாய் நிமோனியா, தீவிர சிறுநீரக பாதிப்பு, உயர் குருதியழுத்த இதயநோய், பெருமூளைச்சிதைவு, நுரையீரல் அழற்சி, குருதி நஞ்சானமை, என்செபலைடிஸ், மார்பக புற்றுநோய், தீவிர கொவிட் நிமோனியா, செப்டிசீமியா, தீவிர சிறுநீரக செயலிழப்பு, பெருந்தமனி தடிப்பு இதய நோய், கொவிட் என்செபலோபதி, வலிப்பு நோய் மற்றும் தைரொய்ட் போன்ற நிலைமைகள்.
-(3)