செய்திகள்

புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கும்: கொழும்பில் பிஸ்வால்

இலங்கையில் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கும் என்றும் இலங்கை தனது எதிர்கால நடவடிக்கைகளில் நெருக்கடியான சவால்களை எதிர்கொள்ளும் என்றும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை ராஜாங்க அமைச்சர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர், தேர்தலின் பின்னர் இலங்கைக்கு பல வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் ஊழல் ஆகியவற்றை ஒழிப்பதற்கு அமெரிக்கா உதவும் என்றும் அவர் கூறினார்.