செய்திகள்

புதிய தேர்தல் முறைமைக்கான கலந்தரையாடல்: தீர்வு எட்டப்படாது முடிவு

புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தவது தொடர்பாக நேற்று திங்கட் கிழமை தேர்தல்கள் ஆணையாளருக்கும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதானிகளுக்கமிடையே இடம்பெற்ற கலந்தரையாடல் தீர்வுகள் எதுவும் எட்டப்படாது முடிவடைந்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று மாலை இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது பழைய முறைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கட்சிகள் சிலவற்றின் பிரதிநிதிகள் யோசனைகளை முன் வைத்துள்ள நிலையில் அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட சில கட்சிகள் எதிர்ப்;பு தெரிவித்து புதிய முறைமையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன் காரணமாக தீர்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது கலந்துரையாடல் முடிவடைந்துள்ளதுடன் எதிர் வரும் நாட்களில் மீண்டும் இந்த கலந்துரையாடல் தொடரவுள்ளது. எவ்வாறாயினும் உடனடியாக தேர்தல் திருத்தத்தை மேற்கொள்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.