செய்திகள்

புதிய தேர்தல் முறையை அமுல் செய்வது கடினம்: சம்பந்தன்

புதிய தேர்தல் முறை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அதனை உடனடியாக அமுல்படுத்துவது சவாலான விடயம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளு மன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறையை உள் ளடக்கிய 20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச் சரவை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்நிலையில் இந்த சட்டமூல நிறைவேற்றமானது தமிழர்கள் தேர்தல் களத்தில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர், லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலில் விபரித்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் பழைய முறையின் கீழ் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட் டுள்ளார். இதேவேளை புதிய தேர்தல் முறையை உடனடியாக அமுல்படுத்துவது தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.