செய்திகள்

புதிய பாராளுமன்றத்தில் 20 ஐ நிறைவேற்றுவோம் : பிரதமர்

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் பாராளுமன்றத்தில் தேர்தல் முறை திருத்தமான 20வது அரசிலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று யட்டிநுவர பகுதியில் நடைபெற்ற நிகழ்வென்றிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கடந்த ஜனவரி 8ம் திகதி நாம் ஏற்படுத்திய மாற்றங்களுடனேயே பயணிப்போம். 20வது திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதத்தை நடத்திய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் புதிய பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றி சகல கட்சிகளுக்கும் பயனுள்ள வகையில் சகலறும் இணங்கும் வகையிலான திருத்தத்தை மேற்கொள்வோம். என அவர் தெரிவித்துள்ளார்.