செய்திகள்

புதிய முறைமையிலேயே தேர்தல் நடக்க வேண்டும் : ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

20வது திருத்தத்தை நிறைவேற்றி எதிர்வரும் பொதுத் தேர்தலை புதிய முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருப்பதாகவும் ஆனால் பழைய முறையில் தேர்தல் நடந்தால் அதற்கும் தாம் தயாராகவே இருப்பதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன பாப்பா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் டைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தற்போதைய பாராளுமன்றத்துக்கு காலம் இருக்கின்றது. அதற்குள் 20வது திருத்தத்தை நிறைவேற்ற முடியும். இதன்படி புதிய முறையிலேயே தேர்தல் நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாம் இருக்கின்றோம். எவ்வாறாயினும் பழைய முறைமையில் தேர்தல் நடந்தால் அதற்கு தயாராகவும் நாம் இருக்கின்றோம். என அவர் அங்கு தெரிவித்துள்ளார்.