செய்திகள்

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பேராளிகளுக்கு உதவித்திடம்

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கான சுயதொழில் உதவித்திட்டத்தில் எதிர்காலத்தில் 70 ஆயிரம் குடும்பங்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

ஆரம்ப கட்டமாக இத்திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்காக 13 ஆயிரம் குடும்பங்கள் பதிவை மேற்கொண்டுள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

5 மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு எத்தகைய தொழில்களை மேற்கொள்ள முடியும் என்ற தகவைலத் திரட்டி அதற்கு ஏற்றவாறு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான சுயதொழில் வேலைத்திட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் நிதிப் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் உதவுகளும் உதவி செய்தவற்குத் தயாராக உள்ளதாகவும் அவ்வாறான உதவிகள் கிடைக்கும் போது நேரடியாக அதனைபெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.