செய்திகள்

புனர்வாழ்வு பெற்ற 6 முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஆறு முன்னாள் போராளிகள் இன்று அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது. யுத்த காலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் மற்றும் அவ் அமைப்பில் அங்கத்துவம் வகித்தார்கள் என கைது செய்யப்பட்டு பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் ஆறு பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் கேணல் எம்.எச்.ஆர்.கமின்டோன் அவர்களின் பணிப்புரைக்கமைய உதவி புனர்வாழ்வு ஆணையாளர் லெப் கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி கப்டன் எச்.எஸ்.டீ.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.

இவ்வாறு கையளிக்கப்பட்டோர் புனர்வாழ்வின் போது சிங்கள மொழி, தச்சுத் தொழில், அலுமினிய பிற்றிங் தொழில், வயறிங் தொழில் போன்ற பயிற்சிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

IMG_20150629_234301[1] IMG_20150629_234624[1]