செய்திகள்

புலம்பெயர் தமிழர்களின் நோக்கத்தை அரசாங்கம் நிறைவேற்றுகின்றது : மஹிந்த

புலம்பெயர் தமிழர்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே  அரசாங்கத்தின் செயற்படுகள் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தன்னை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்திலேயே புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் செயற்பட்டனர். இந்த  நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எம்மை பழிவாங்கி என்னுடன் இருந்தவர்களை சிறையில் அடைக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. என்றே நாம் கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் படையினரின் உறவினர்களுடனான சந்திப்பின் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.