செய்திகள்

புலியில் அதிரடி சண்டை

கத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்து வரும் படம் புலி. இப்படத்தினை ‘ஃபேண்டசி’ புகழ்  இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வருகிறார். இந்தப் படம் இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகிறது. இந்தப் படத்தில் எல்லோருக்குமே இரண்டு கதாபாத்திரங்கள் என்கிறார்கள். அதாவது இரண்டு விஜய், இரண்டு ஸ்ருதி ஹாசன், இரண்டு ஹன்சிகா, இரண்டு ஸ்ரீதேவி, இரண்டு  சுதீப், இரண்டு  தம்பி ராமையா, இரண்டு பிரபு.

இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர்  ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையைமக்கிறார்

கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கும் ‘புலி’  படக்குழுவினர் வாகாமன் நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். தற்போது அதைத்தொடர்ந்து அங்கு மஹோகனி எனும் இடத்திலுள்ள அடர்ந்த காடுகளில்  சண்டைக்காட்சிகளை படமாக்குகிறார்கள்.

முதன் முறையாக மார்சியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொண்டு சண்டைக் காட்சியில் விஜய்  நடிக்கிறார்.  இதற்காக தாய்லாந்தில் இருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வரவழைப்பட்டுள்ளனர்.