செய்திகள்

பெருந்தொகையான ஆயுதங்களுடன் வந்த கப்பல்: காலி துறைமுகத்தில் தடுத்துவைப்பு

பெருந்தொகையான ஆயுதங்களுடன் வந்த கப்பல் ஒன்று காலி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கப்பலில் காணப்பட்ட 12 கொள்கலன்களில் ஆயுதங்ள் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 3 ஆயிரம் வரையிலான ஆயுதங்கள் இந்தக் கப்பலில் காணப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்திருக்கின்றது.

இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே இவை கைப்பற்றப்பட்டன. பெருமளவு பொலிஸாரும் அதிகாரிகளும் குறிப்பிட்ட கப்பலில் சோதனைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

குறிப்பிட்ட கப்பல் இலங்கையில் பதவி செய்யப்பட்டதாகும்.