செய்திகள்

பெருந் தெருக்களில் சைக்கிள்களுக்கென தனி வழி தடத்தை அமைக்க நடவடிக்கையெடுப்போம் : சம்பிக்க ரணவக்க

பெருந் தெருக்களில் துவிச்சக்கர வண்டிகளுக்கென விசேட வழி தடமொன்றை அமைக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுச் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெருந்தெருக்களில் துவிச்சக்கர வண்டிகளுக்கென விசேட வழிதடங்கள் அமைக்கப்படவேண்டும். அதிவேக வீதியில் இப்படியான தனியான வழிதடம் இருக்க வேண்டும். இதனை அமைக்க நாம் நடவடிக்கையெடுப்போம். அத்துடன் எதிர்வரும் 7ம் திகதி பாராளுமன்றத்துக்கு அருகில் இருந்து சுதந்திர சதுக்கம் வரை வலுச் சக்தியை சேமிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் சைக்கிளோட்ட நிகழ்வொன்றை நடத்தவுள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.