செய்திகள்

பெரும்பான்மை ஆதரவு உள்ளவரே எதிர்க் கட்சி தலைவராக வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ –

பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கின்றதோ அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நடவடிக்கையெடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழுப்பு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
“இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் கடைபிடிக்கப்பட்ட சம்பிரதாயங்களை கருத்திற்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும். தற்போதய எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு இந்த விடயத்தில் தெளிவு இருக்குமென எண்ணுகின்றேன். இந்நிலையில் எதிர்க் கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கின்றதோ அவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” என மஹிந்த தெரிவித்துள்ளார்.