செய்திகள்

பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா

பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா அது பற்றி கூறி உள்ளார்.

ஒரு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகை ராதிகா நடித்துள்ளார். அந்த கல்வி நிறுவனம், விளம்பரத்தில் சொல்லுவது போல் செயல்படுவதில்லை என்றும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் கூறி அது தொடர்பாக சமூக வலை தளங்களில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. மேலும், அது ராதிகாவின் கல்வி நிறுவனம் என்றும் கூட தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த கல்வி நிறுவனத்துடனான தனது தொடர்பு வெறும் தொழில் ரீதியானது மட்டுமே என்றும்,, அந்த நிறுவனம் பற்றி பெற்றோர் நன்கு விசாரித்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்றும் ராதிகா தற்போது தடாலடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், ”அந்த கல்வி நிறுவனத்தின் விளம்பரத்தில் மட்டுமே நான் நடித்துள்ளேன். மற்றபடி, அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. பெற்றோர் நன்கு விசாரித்துக் கொண்டு பிள்ளைகளை சேர்க்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.

1(1)