செய்திகள்

பொகவந்தலாவையில் இரண்டு கைக்குண்டு மீட்பு

பொகவந்தலாவ பகுதியில் 13.07.2015 அன்று மாலை இரண்டு கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் பகுதியிலேயே இக் கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போதே தொழிலாளர்களால் மேற்படி கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தொழிலாளர்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குண்டுகளை பாதுகாப்பாக மீட்டுள்ளதோடு குண்டுகளை செயழிலக்க வைக்கும் பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.

மாணிக்க கல் அகழ்விற்காக செப்பல்டன் தோட்ட பகுதியை தொழிலாளர்களுக்கு அரசு குத்தகை அடிப்படையில் 61  பகுதிகளாக பகிர்ந்தளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC09586