செய்திகள்

பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி- விஷால் மோதல்

எதிர்வரும் நடிகர் சங்கத் தேர்தல் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து மோதப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக சரத்குமார் அணிக்கும், விஷால் அணிக்கும் காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், ஜூலை 15ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு சரத்குமார் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். தற்போது ராதாரவி உள்ளிட்ட சரத்குமார் தலைமையிலான அணியினர் தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.