செய்திகள்

பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபல சேனா அமைப்பு கலைகிறது

பாராளுமன்ற தேர்தலின் பின்னர் பொதுபல சேனா அமைப்பை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை வாக்குகள் இன்றி நாட்டில் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என்ற மாயை இருந்தது. ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிவுடன் அந்த மாயை இல்லாது போய்விட்டது. தற்போது நாட்டுக்கு சிறந்த தலைவர் வந்துவிட்டார். இனி சிறந்த பயணத்தை முன்னெடுக்க முடியும். இதனால் இனி இந்த அமைப்பு அவசியப்படாது. ஆகவே பொதுத் தேர்தலின் பீன்னர் இந்த அமைப்பை கலைக்க தீர்மானித்துள்ளோம். என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)