செய்திகள்

பொதுத் தேர்தலில் அன்ன சின்னத்தில் போட்டியிட சிறிய கட்சிகள் முயற்சி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட முடியுமா என அரசியல் கட்சிகள் சில ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அன்ன சின்னத்தில் போட்டியிட்டே மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட சிறிய கட்சிகள்  சில ஜனநாயக கூட்டமைப்பின் கீழ் போட்டியிட முடியுமா என கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகள் தமது சொந்த சின்னத்தில் தனித்தே போட்டியிடுவோம் என ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.