செய்திகள்

பொதுத் தேர்தல் புதிய முறையிலேயே நடக்கும்: அமைச்சர் ராஜித்த

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறைமையிலேயே நடைபெறுமென அமைச்சரவை பேச்சாளரான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தேர்தல்கள் ஆணையாளரினால் 4 முறைமைகள் அடங்கிய யோசனை திட்டமென்று அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்தாகவும் அதில் ஒரு முறையை தெரிவு செய்து அதனை நடைமுடைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதில் ஒரு முறையான தொகுதவாரியாக 165 ஆசனங்களையும், விகிதாசார முறையில் 60 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 25 ஆசனங்களையும் கொண்டதாக புதிய தேர்தல் முறைமையை தயாரிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறை திருத்தம்தொடர்பாக பீ.பீ.சி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர்இதனை தெரிவித்துள்ளார்.