செய்திகள்

”பொது நிகழ்வுகளுக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும்”: பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வலியுறுத்தல்!

இலங்கையில் கொவிட் தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமடையும் நிலையில் மீண்டும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தடை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கொவிட் தடுப்புச் செயலணிக்கு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது நாட்டில் டெல்டா தொற்றுப் பரவும் நிலையில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்குவது ஆபத்தானது என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக குறித்த நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது சிறந்தது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
-(3)